
நாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடிக்கும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று மாதியம் 12 மணி வரையான காலப்பகுதியில் 45 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளது.
அதன்படி இன்று நண்பல் 12 மணி வரையான நிலவரப்படி கொழும்பில் 34 வீதமான வாக்குப் பதிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப் பதிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 46 வீதமான வாக்குப் பதிவுகளும், மாத்தறை மாவட்டத்தில் 41 வீதமான வாக்குப் பதிவுகளும், கேகாலை மாவட்டத்தில் 47 வீதமான வாக்குப் பதிவுகளும், திருகோணமலை மாவட்டத்தில் 50 வீதமான வாக்குப் பதிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 50 வீதமான வாக்குப் பதிவுகளும், காலி மாவட்டத்தில் 45 வீதமான வாக்குப் பதிவுகளும், புத்தளம் மாவட்டத்தில் 35 வீதமான வாக்குப் பதிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 48 வீதமான வாக்குப் பதிவுகளும், யாழ் மாவட்டத்தில் 35 வீதமான வாக்குப் பதிவுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 வீதமான வாக்குப் பதிவுகளும், கண்டி மாவட்டத்தில் 43 வீதமான வாக்குப் பதிவுகளும் பதுளை மாவட்டத்தில் 45 வீதமான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப் பதிவுகளும், திகாமடுல்ல மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப் பதிவுகளும், வன்னி மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப் பதிவுகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 28 வீதமான வாக்குப் பதிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப் பதிவுகளும், குருணாகல் மாவட்டத்தில் 40 வீதமான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment