இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் இராஜினாமா - புதிய உப தலைவர் நியமனம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் இராஜினாமா - புதிய உப தலைவர் நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவன உப தலைவராக ஜயந்த தர்மதாஸ நியமனம்-SLC Vice President KMathivanan resigns Dr Jayantha Dharmadasa Appointed
இடது: கே. மதிவாணன், வலது: பேராசிரியர் ஜயந்த தர்மதாஸ

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியிலிருந்து விலகிய கே. மதிவாணனின் இடத்திற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜயந்த தர்மதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் உப தலைவர் மதிவாணன் தனது பதவியை இன்று (29) இராஜினாமா செய்ததோடு, அது தொடர்பான கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மோகன் டி சில்வாவிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், கே. மதிவானனின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்வதற்கும், இலங்கை கிரிக்கெட் நிறுவன சட்டத்தின் விதிகளின்படி உருவாக்கப்பட்ட வெற்றிடங்களை நிரப்ப, துணைத் தலைவரை நியமிப்பதற்கும் இலங்கை கிரிக்கெட்டின் செயற்குழு இன்று (29) பிற்பகல் அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட்டின் புதிய துணைத் தலைவராக இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஜயந்த தர்மதாஸவை நியமிக்க இலங்கை கிரிக்கெட்டின் செயற்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவன நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை காரணமாக, தான் பதவி விலகியதாக, கே. மதிவாணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், கே. மதிவாணன் தனது பதவி தொடர்பில் மேற்கொண்ட விடயம் தொடர்பில் அவருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஒழுக்காற்று விசாரணை நடாத்த, இலங்கை கிரிக்கெட் செயற்குழு ஏகமனதாக முடிவு எடுத்த நிலையிலேயே, அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad