பாராளுமன்ற அமர்வுகளை சுகாதார பாதுகாப்புடன் முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டல் 31 ஆம் திகதி கையளிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

பாராளுமன்ற அமர்வுகளை சுகாதார பாதுகாப்புடன் முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டல் 31 ஆம் திகதி கையளிப்பு

பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கொவிட்-19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு கையளிக்கப்படுமென சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்ஷ்மன் கம்லத் தொரிவித்தார். 

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் இந்த வழிகாட்டல் தொகுப்பு கையளிக்கப்படவுள்ளது. 

பொதுத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கவிருக்கும் பாராளுமன்றத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்கள், பாராளுமன்ற பணியாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர்களை கொவிட்-19 சூழலிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களைத் தயாரிப்பது குறித்து ஆராயும் நோக்கில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்ஷ்மன் கம்லத் தலைமையிலான சுகாதார அமைச்சின் குழுவினர் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வியஜம் மேற்கொண்டிருந்தனர். 

இந்த விஜயத்தின்போது அவர்கள் பாராளுமன்றத்தின் பல்வேறு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், ஏற்கனவே பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் திருப்தியை வெளியிட்டிருந்தனர். 

சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை தயாரிக்கும்போது பாராளுமன்ற சபா மண்டபம், உணவுக் கூடம் மற்றும் பாராளுமன்ற நூல்நிலையம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவிருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்தார். 

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் வேண்டுகோளுக்கிணங்க கசுகாதார அமைச்சின் ஊடாக இந்த வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad