புவனேகபாகு மன்னனின் அரச மண்டப விவகாரம், உண்மையை வெளியிடா விடின் வழக்கு தொடருவேன் - அகில விராஜ் காரியவசம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 22, 2020

புவனேகபாகு மன்னனின் அரச மண்டப விவகாரம், உண்மையை வெளியிடா விடின் வழக்கு தொடருவேன் - அகில விராஜ் காரியவசம்

கல்வியமைச்சர் அகில விராஜ் ...
(இராஜதுரை ஹஷான்)

குருநாகலையில் உடைக்கப்பட்ட 2ம் புவனேகபாகு மன்னனின் அரச மண்டபத்தை ஹோட்டலாக மாற்றியமைக்குமாறு தான் அழுத்தம் பிரயோகித்ததாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத் திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அவர் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லாவிடின் வழக்கு தாக்கல் செய்வேன் என ஐக்கிய தேசி கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 13 ஆம் நூற்றாண்டுகால 2 ஆம் புவனேகபாகு மன்னின் அரச மண்டபம் உடைக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்.

குருநாகலை நகர பிதாவிற்கு எதிராக எவரும் நடவடிக்கை எடுக்க முடியாது. என அரசாங்கத்தில் அமைச்சு பதவியை வகிப்பவர் பகிரங்கமாக குறிப்பிடும் அளவிற்கு தற்போது விசாரணை நடவடிக்கைகளில் அரசியல் அழுத்தம் காணப்படுகிறது.

மோசடி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய காரணத்தினால் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் செனரத் திஸாநாயக்க கடந்த அரசாங்கத்தில் அரச சேவை ஆணைக்குழுவின் ஊடாக பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கள் என்ற விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு மோசடியாளர்களுக்கு உயர் பதவியை வழங்கியுள்ளது.

உடைக்கப்பட்ட அரச மண்டபத்தை ஹோட்டலாக மாற்றியமைக்குமாறு தான் அழுத்தம் பிரயோகித்ததாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் போலியாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

தன்னிடம் இதற்கான ஆதாரங்கள், குரல் பதிவுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு செயற்படாமல் பொறுப்பான அரச அதிகாரியாக இவர் செயற்பட வேண்டும்.

இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஆதாரங்களை பொதுத் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லாவிடின் வழக்கு தாக்கல் செய்வேன். அரச மண்டபம் உடைக்கப்ட்ட விவகாரம் தற்போது மறைக்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு தண்டடை வழங்கப்படுமா என்ற சந்தேகம் காணப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad