நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை கைலோ (@emotionaolpedant) என்பவர் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.
"இதுவரை பல வித்தியாசமான வவ்வால் படங்களைப் பதிவிட்டிருக்கிறோம். அந்த வகையில், பட்டிகோஃபர் எபலெட்டெட் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வவ்வாலான இது நாய் முகத்துடன் பறந்து கொண்டிருக்கிறது” என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 23,300 பேருக்கும் மேல் இந்த புகைப்படத்தை லைக் செய்திருக்கிறார்கள். 5,400 பேர் டுவிட் செய்திருக்கிறார்கள். பலரும் இதுபோன்ற வித்தியாசமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வகை வவ்வால் இனங்கள் தென் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதிகளில் வசிக்கின்றன. குறிப்பாக ஐவரி கோஸ்ட், கானா, லிபெரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காணப்படுகின்றன.
No comments:
Post a Comment