ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் பாரிய அளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளதாக பிரதமர் மஹிந்த தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, July 5, 2020

ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் பாரிய அளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளதாக பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தில் இலங்கைக்கு சொந்தமாகவிருந்த பாரிய அளவிலான நிலப்பரப்பை இழந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச செயலக பிரிவின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு நேற்று மாலை வீரக்கெட்டியவில் இடம்பெற்றது. இதன்போது பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டார். 

துறைமுக நகர ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளதனை மீளவும் வழமைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் அரசாங்கத்தின் கீழ் நாட்டையே வேலைத்தளமாக்கி மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் கடந்த ஐந்து வருடங்கள் முழுமையாக தடைப்பட்டுள்ள நிலையில் கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு நடவடிக்கையும் இரண்டு வருடங்கள் தடைப்பட்டிருந்ததாக பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த காலப்பகுதியினுள் துறைமுக நகர ஒப்பந்தத்தை மாற்றியமையினால் எங்கள் நாட்டிற்கு சொந்தமாகவிருந்த நிலப்பரப்பை குறைத்து கடந்த அரசாங்கம் ஒப்பந்தம் தயாரித்துள்ளது. ஒப்பந்தம் மாற்றமடைந்தமையினால் துறைமுக நகரத்தின் மூலம் இழந்த நிலப்பரப்பை மீள பெறுவதற்கு தற்போது எமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து பிரதேசத்திலும் அபிவிருத்தி மேற்கொள்வதற்காக ஒரே அபிவிருத்தி வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை அதிகரித்து மாகாண மட்டத்தில் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

எங்கள் அரசாங்கத்தின் கீழ் தங்காலை சிறைச்சாலையை அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதனை பிரதமர் இதன் போது நினைவு கூர்ந்தார்.

அதன் மூலம் தற்போது வரையில் அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் ஓரளவு பொருளாதார முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மேலதிகமாக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை இதுவரையில் ஆசியாவின் சிறந்த எடுத்துக்காட்டுடைய சிறைச்சாலையாகியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டீ.வீ.சானக மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் இணைந்திருந்தனர்.

No comments:

Post a Comment