யாழ். நீா்வேலி பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பா் வாகனமொன்றை பழுது பாா்த்துக் கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பா் வாகனத்தின் சுமை பெட்டி விழுந்ததில் உடல் நசுங்கி உயிாிழந்துள்ளான்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுமை பெட்டியை ஜக் மூலம் தூக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுது பாா்த்துக் கொண்டிருந்தபோது ஜக் நழுவி சுமைப் பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளது.
சம்பவத்தில் மானிப்பாய் பகுதியைச் சோ்ந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளான்.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment