ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 22, 2020

ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிப்பு

விடுதலைப்போராளிகள் சாதியக் ...
ஜனநாயக போராளிகள் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தமது பூரண ஆதரவினை எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று 22ம் திகதி திருகோணமலையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் இல்லத்தில் சம்பந்தனுக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையே நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இவ்வாறு தெரிவித்தனர்.

இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயக போராளிகள் கட்சி தமது ஆதரவை எமக்கு வழங்கவுள்ளார்கள். 

பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகும் நாம் இணைந்து செயற்பட இருக்கின்றோம். தமிழ் மக்களுடைய தீர்வுக்காக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாக நாம் திறந்த மனதுடன் பேசவுள்ளோம்.

இவர்கள் எமக்கு ஆதரவு வழங்குகின்றனர். அவர்கள் எமது போராளிகள் என்பதன் அடிப்படையில் நாம் அவர்களை வரவேற்கின்றோம். ஒருமித்த நாட்டுக்குள் பிரிபடாத நாட்டுக்குள் எமது மக்கள் கௌரவமாக சுகந்திரமாக சமத்துவமாக வாழ வேண்டும் என்ற நோக்கிலே நாம் செயற்படுவோம். என தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல் தொடர்பாக ஜனநாயக கட்சியின் செயலாளர் கதிர் கருத்து தெரிவிக்கையில், ஜனநாயக போராளிகள் கட்சியானது தமிழ் தேசியம் தொடர்பாக சம்பந்தன் ஐயாவுடன் பல விடயங்களை பேசினோம் எதிர்காலத்தில் எவ்வாறு எமது தமிழ் தேசியத்தை பலப்படுத்துவது என்பது தொடர்பாக ஐயாவோடு பேசியுள்ளோம்.

முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பயணிப்பதாக தெரிவித்துள்ளோம். தமிழர்களுடைய உரிமையை பெறுவதற்கு எவ்வாறு நாம் ஜனநாயக ரீதியாக உறுதியாகவும் நிதானமாகவும் பயணித்து வருகின்றோம்.என்பதை ஐயா எமக்கு தெளிவாக கூறியிருந்தார்.

அன்பான தமிழ் மக்களே ஐயாவுடைய எண்ணமும் மன உறுதியும் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான சுதந்திரத்தைப் பெற்றுத் தரும் என்பதனை இந்த இடத்தில் உறுதியாக கூறிக் கொள்ள விரும்புக்கின்றோம்.

No comments:

Post a Comment