கண்டி மாவட்ட மக்களின் ஆதரவுடன் பாராளுமன்ற பலத்தை நாம் எடுத்துக்காட்ட வேண்டும் - வேட்பாளர் பாரிஸ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 29, 2020

கண்டி மாவட்ட மக்களின் ஆதரவுடன் பாராளுமன்ற பலத்தை நாம் எடுத்துக்காட்ட வேண்டும் - வேட்பாளர் பாரிஸ்

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் ...
ஐ.ஏ. காதிர் கான் 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்ட மக்களின் ஆதரவுடன் பாராளுமன்ற பலத்தை நாம் எடுத்துக்காட்ட வேண்டும். இதனை நாம் நிறைவேற்றவேண்டும். அதன் பொறுப்பும் கடமையும் உங்களிடமே உள்ளன என்று, கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட மக்கள் நன்றிக்கடன் உள்ளவர்கள். நன்றிக்கடன் செலுத்தும் நோக்கில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வீதத்தில் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷவைத் தெரிவு செய்தனர். அதேபோன்று, எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சி நிச்சயமாக அதி கூடிய ஆசனங்களைக் கைப்பற்றும் என்றும் வேட்பாளர் பாரிஸ் குறிப்பிட்டார்..

கண்டி, கம்பளை, ஹரிஸ்பத்துவ, நாவலப்பிட்டிய மற்றும் உடுநுவர ஆகிய தொகுதிகளில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் பொதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்னும் பல வருடங்களுக்கு தொடர்ந்தும் இந்நாட்டின் ஜனாதிபதியாகவே கடமையாற்றுவார். மக்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த வரவேற்பும் மரியாதையும் செல்வாக்கும் உள்ளது. 

நாட்டை அபிவிருத்தி செயவதற்கு ஜனாதிபதியிடம் சிறந்த திட்டங்களும் ஆளுமைகளும் உள்ளன. அவற்றை அமுல் செய்வதற்கு அறுதிப் பெரும்பான்மை கொண்ட பாராளுமன்ற பலம் வேண்டும். கண்டி மாவட்ட மக்களின் ஆதரவுடன் அந்தப் பாராளுமன்ற பலத்தை நாம் எதிர்வரும் தேர்தலில் எடுத்துக்காட்ட வேண்டும். இதனை நாம் நிறைவேற்றுவோம். அதன் பொறுப்பும் கடமையும் உங்களுடமே உள்ளன என்றார்.

No comments:

Post a Comment