2.4 கிராம் ஹெரோயின் மற்றும் 5,600 போதை மாத்திரைகளுடன் பிரபல ஹோட்டலுக்கு அருகில் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, July 26, 2020

2.4 கிராம் ஹெரோயின் மற்றும் 5,600 போதை மாத்திரைகளுடன் பிரபல ஹோட்டலுக்கு அருகில் இருவர் கைது

290 டெட்டனேட்டர்களுடன் தந்தை ...
கொழும்பிலுள்ள கலதாரி ஹோட்டலுக்கு அருகில் 2.4 கிராம் ஹெரோயின் மற்றும் 5,600 போதை மாத்திரைகளுடன் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் புறக்கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் நேற்று (25) பிற்பகல் 1.50 மணியளவில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது, ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இச்சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வத்தளை மற்றும் அங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த 20, 29 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களை இன்று (26) புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் எடுத்துள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடம், புறக்கோட்டை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad