சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 1,937 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத மின்சாரம் பெறுபவர்களை கைது செய்வதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய, இலங்கை மின்சார சபையின் விசாரணை பிரிவினர், பொலிஸாரின் உதவியுடன் நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய, கடந்த வருடத்தின் மே மாதம் முதல் இவ்வருடத்தின் மே மாதம் வரையான ஒரு வருட காலப்பகுதியினுள் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 1,937 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 59 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவதன் காரணமாக, இலங்கை மின்சார சபைக்கு வருடமொன்றுக்கு 100 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment