அம்பாரை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் நான்கு ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என்கிறார் அதாஉல்லா - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 1, 2020

அம்பாரை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் நான்கு ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என்கிறார் அதாஉல்லா

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊர் மக்களும் ஒற்றுமைப்பட்டு சிந்தித்து வாக்களிப்பார்களாயின் இம்முறை அம்பாரை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் கட்சி 04 ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார். 

இறக்காமம் பிரதேசத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி கே.எல். சமீமின் இல்லத்தில் 27ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.​ 

அவர் மேலும் உரையற்றுகையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதன் நோக்கங்கள் சரியான பாதையில் இட்டுச்செல்ல வில்லை என்பதாலும், மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் கண்ட கனவுகளை நிறைவேற்றவே நாங்கள் தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

எமது மக்களின் முறையான தேவைகளை இனம்கண்டு செயற்படுவதனால் தான் மக்கள் எம்முடன் கைகோர்த்து இணைகின்றனர். எமது பிரச்சினைகளை முரண்பாடு இல்லாமல் இணக்கப்பாட்டோடு தீர்க்க வேண்டும். எமக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அந்தப் பிரச்சினைகளை தீர்க்கத்தான் தலைமைத்துவம் முன்னின்று செயற்பட வேண்டும். 

மாறாக மக்களை கூட்டி போட்டோ, படங்கள் எடுப்பதன் மூலமும் கோசங்கள் போடுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகளை காண முடியாது. விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் எமது மக்களை கொன்று குவித்த வரலாறு எமக்கு தெரியும். 

இத் தேர்தலில் எமது மக்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிப்பதன் மூலம் எமது மக்களுக்கு என்ன நடக்கப் போகின்றது.

இவர்களால் எதனையும் செய்ய முடியாது.தேசிய காங்கிரஸின் கொள்கைகள் என்ன என்பதை தற்போது மக்கள் விளங்கிக் கொண்டுள்ளனர் என்றார். 

ஹிங்குறாணை நிருபர்

No comments:

Post a Comment