கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள காணியொன்றுக்கு போலியான ஆவணம் தயாரித்து மற்றுமொரு தரப்பினருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 05 பேருக்கு 67 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால், இச்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முதலாவது குற்றவாளிக்கு 25 வருட சிறைத் தண்டனையும், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது குற்றவாளிகளுக்கு தலா 10 வருட சிறைத் தண்டனையும், நான்காவது குற்றவாளிக்கு 12 வருட சிறைத் தண்டனையும் என 67 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அவர்கள் மீது தனித்தனியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, முறைப்பாட்டாளருக்கு 14 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதோடு, 130,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment