உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு லண்டனில் இன்று - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு லண்டனில் இன்று

உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு காணொலி காட்சி வழியாக லண்டனில் இன்று நடத்தப்படுகிறது.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று 64 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டுள்ளது. இது நேற்று மாலை நிலவரம் ஆகும்.

இந்த நிலையில் உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாடு, காணொலி காட்சி வழியாக நடத்தப்படுகிறது. இதை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அறிவித்தார்.

இதுபற்றி அவர் நாடாளுமன்றத்தில் கூறும்போது, “நாளை (இன்று) நான் உலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாட்டை திறந்து வைப்பேன். காணொலி காட்சி வழியாக நடக்க்கும் இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளையும், தனியார் துறை நிறுவனங்களையும், சிவில் சமூகத்தின் தலைவர்களையும் ஒன்றிணைக்கிறோம். இதன்மூலம் தடுப்பூசி கூட்டணி அமைப்பிற்காக குறைந்த பட்சம் 7.4 பில்லியன் டொலர் நிதி திரட்டப்படும். 

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மனித குலத்தை ஒன்றிணைக்க உலகம் ஒன்று சேரும்போது, இந்த மாநாடு ஒரு முக்கிய தருணமாக அமையும்” என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment