வெட்டுக்கிளிகள் காணப்படும் பகுதிகள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

வெட்டுக்கிளிகள் காணப்படும் பகுதிகள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

நாட்டின் பல பிரதேசங்களில் பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகள் காணப்படும் பகுதிகள் குறித்த தகவல்களை வழங்குமாறு விவசாய திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்காக 1920 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு இது தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் என்று விவசாய தினைக்கள பணிப்பாளர் நாயகம் கலாசிதி எம்.டப்ளியு .எம். வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களுக்கு அமைவாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை இந்த வெட்டுக்கிளி தாக்கம் குறித்து விவசாயிகள் அவதானமாக இருக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பயிர்ச் செய்கைகளில் அல்லது விவசாய நிலங்களில் இது தொடர்பில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அது தொடர்பில் அறியத் தருமாறும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

1920 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது 077 3028270 எனும் கைத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்க முடியும்.

No comments:

Post a Comment