ஹொங்ஹொங்கில் சீனா பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினால், ஹொங்ஹொங்கில் இங்கிலாந்து குடியேற்ற விதிகள் மாற்றப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
ஹொங்ஹொங்கில் சீனா தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற சர்ச்சைக்குரிய சட்டத்தை கொண்டு வந்து அமுல்படுத்த விரும்புகிறது.
இது தொடர்பான மசோதா, ஹொங்ஹொங்கில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டங்கள் நடக்கின்றன.
அதோடு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது ஹொங்ஹொங்கின் சுயாட்சிக்கு வேட்டாக அமைந்துவிடும் என்று கருதப்படுகிறது.
இதையொட்டி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது ஹொங்ஹொங்கில் சீனா அந்த பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றினால், ஹொங்ஹொங்கில் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள், இங்கிலாந்தில் விசா இல்லாமல் 12 மாதங்கள் வந்து இருக்கும் வகையில் குடியேற்ற விதிகள் மாற்றப்படும்.
பிராந்திய உறவை நிலை நிறுத்துவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கூடுதலான குடியேற்ற உரிமைகள் பெறுவார்கள். இங்கிலாந்தில் தங்கி இருந்து வேலை செய்வது உட்பட இதில் அடங்கும். இது அவர்கள் குடியுரிமை பெறுவதற்கான பாதையாக மாறும். குடியேற்ற விதிககளில் மாற்றம் கொண்டு வந்தால், அது இங்கிலாந்து வரலாற்றில் விசா முறையில் கொண்டு வருகின்ற மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாக அமையும்.
ஹொங்ஹொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள். சீனா அவர்களின் பயத்தை நியாயப்படுத்த தொடர்ந்தால், இங்கிலாந்து மனசாட்சியுடன் தோள்களை கவ்விக்கொண்டு வெளியேற முடியாது. அதற்கு பதிலாக நாங்கள் எங்கள் கடமைகளை மதித்து ஒரு மாற்று திட்டத்தை வழங்குவோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
No comments:
Post a Comment