குட்டையில் குளிக்கச் சென்ற தந்தை, மகள் உள்ளிட்ட மூவர் பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 6, 2020

குட்டையில் குளிக்கச் சென்ற தந்தை, மகள் உள்ளிட்ட மூவர் பலி

நீர் நிரம்பிய குட்டையொன்றில் குளிக்கச் சென்ற தந்தை (38) அவரது மகள் மற்றும் அவர்களது உறவினரின் சிறுமி ஆகிய 12, 13 வயதுடைய சிறுமிகள் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.

இன்று (06) முற்பகல் 10 மணியளவில் மடுல்சீமை, கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள நீர் நிரம்பிய குழியில் குறித்த மூவரும் மூழ்கியுள்ளதாக, மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பை அடுத்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மெதவலகமவைச் சேர்ந்த ஆர்.எம். ஜயரத்ன (38), அவரது மகளான நிகேஷலா (12) மற்றும் சகோதரியின் மகளான பர்ணி தில்ருக்ஷி (13) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் மூவரினதும் சடலங்கள், பிரேதப் பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment