சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 6, 2020

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு

மெதகம, திவியாபொல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (05) மாலை, இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், குறித்த வீட்டைச் சோதனையிட்டனர். 

இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மெதகம, திவியாபொல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதோடு, இன்று (06) ஆரம்பக்கட்ட நீதவான் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment