இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 70 கடற்படையினர் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 6, 2020

இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 70 கடற்படையினர் விடுவிப்பு

விமானப் படையினரால் செயற்படுத்தப்படும் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 70 கடற்படையினர் இன்று (06) காலை தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வௌியேறியுள்ளனர்.

இவர்கள் வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படையினராவர். கடந்த மே மாதம் 20 ஆம் திகதி தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு இவர்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

பிசிஆர் பரிசோதனையில் இவர்கள் கொரோனா தொற்றுக்கு உட்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடமைக்குச் செல்லும் முன்னர் மேலும் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு இவர்கள் அறிவுருத்தப்பட்டுள்ளனர்.

இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையம் விமானப்படை கட்டளை அதிகாரி ரொஹான் பத்திரனவின் மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment