(செ.தேன்மொழி)
நிதிக்குழுவின் சுயாதீன உறுப்பினர்கள் இருவரும் ஆளும் தரப்பின் அளுத்தம் காரணமாகவே பதவி விலகியுள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, நிதி குழுவுக்கு நியமிக்கப்படும் சுயாதீன உறுப்பினர்கள் ஆறு வருட கால பதவியின் நிமித்தமே நியமிக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் ஆளும் தரப்பின் அளுத்தம் காரணமாக மூன்று வருட காலத்திலேயே பதவி விலகியுள்ளனர். இது நாட்டின் நிதி முகாமைத்துவதற்றிக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என்றும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, நிதிக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் சுயாதீன உறுப்பினர்கள் மூன்று பேர் நியமிக்கப்படுவார்கள். அவர்களின் பதவிக்காலம் ஆறு வருடமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
சுயாதீனமாக இயங்க வேண்டிய இவர்களுக்கு ஆளும் தரப்பினர் தொடர்ந்தும் அளுத்தம் தெரிவித்து வருவதனால், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்ற காரணத்தினால் மூன்று வருட பதிவிக் காலத்திலேயே இந்த சுயாதீன உறுப்பினர்களில் இருவர் பதவி விலகியுள்ளனர். இது பெரும் நெருக்கடி நிலைமையாகும்.
நாட்டில் ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டும் என்றால் அது சுயாதீன குழுக்கலாலே சாத்தியமாகும். அதனையும் தற்போதைய அரசாங்கம் தலையிட்டு இல்லாதொழித்து வருகின்றது.
மத்திய வங்கியின் செயற்பாடுகளும் சுயாதீனமாக இருக்க வேண்டும். மத்திய வங்கியே பணவீக்கம் மற்றும் ரூபாவின் பெறுமதியை பாதுகாத்தல் என்ற செயற்பாடுகளை செய்து வருகின்றது.
மத்திய வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள உரிய கொள்கைகளை பின்பற்றுவதன் ஊடாகவே அதன் சுயாதீனமும் பாதுகாக்கப்படும். அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் துறைசார் நிபுணர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இவ்வாறா? ஜனாதிபதி தேர்தலின் போது பெரிதும் ஆர்வத்துடன் அழைத்துவரப்பட்ட வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள், இன்று குண்டு தாரிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரியும் பணிப் பெண்கள் ஊடாகவே நாட்டுக்கு அதிகமான வருமானம் கிடைக்கின்றது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் 40 ஆயிரம் இலங்கைப் பிரஜைகள் நாட்டுக்குள் வர முடியாமல் சிக்குண்டுள்ளனர்.
அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான உரிய வேலைத்திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை. மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரியும் தங்களது நாட்டு பிரஜைகளை பாதுகாக்கும் பொருட்டு அவர்களது நாட்டிலிருந்து வைத்தியர்களை அங்கு அனுப்பி, பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்து அவர்களை தனது நாட்டுக்கு அழைத்து வருகின்றனர். ஆனால் இங்கு தன்நாட்டு பிரஜைகளையே குண்டுதாரிகளாக சித்தரிக்கின்றனர்.
No comments:
Post a Comment