தேர்தல்கள் ஆணையாளர் பொதுத் தேர்தலை விரைவாக நடத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

தேர்தல்கள் ஆணையாளர் பொதுத் தேர்தலை விரைவாக நடத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்படுகின்றார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையினரது பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தல்கள் ஆணையாளர் பொதுத் தேர்தலை விரைவாக நடத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், புதிய பாராளுமன்றத்தை விரைவாக கூட்டுவதே தேசிய தேவையாக காணப்படுகின்றது. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது. கொரோனா வைரஸ் பரல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆகவே பொதுத் தேர்தல் வெகுவிரைவில் நடத்த வேண்டும். என்பதே எதிர்த்தரப்பினரை தவிர்த்து ஏனைய தரப்பினரது எதிர்பார்ப்பாக உள்ளது.

பொதுத் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய அறிக்கை நீதிமன்றில் ஆளும் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் பொதுத் தேர்தலை நடத்தி பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்பது ஜனாதிபதியின் பிரதான இலக்காக உள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகிறார். ஆணைக்குழு உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பு கேள்விக்குற்படுத்தப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுகாதார தரப்பினரது பரிந்துரை மற்றும் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி பொதுத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். ஜனநாயக முறையில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் ஆணைக்குழுவுக்கு வழங்கும்.

ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்கான காரணிகள் தற்போது பகுதியளவில் வெளியாகியுள்ளன. ஆனால் ஆரம்ப மற்றும் உண்மை காரணிகள், தாக்குதலின் பின்னிணியில் இருந்தவர்கள் யார் என்ற காரணிகள் இதுவரையில் வெளியாகவில்லை. 

நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பினை அரசியல் தேவைக்காக பலவீனப்படுத்தியதன் விளைவை நாட்டு மக்களே அனுபவித்தார்கள். வெகுவிரைவில் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment