(செ.தேன்மொழி)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தற்போது உரிய நேரத்தில் தேர்தலும் நடத்தப்படாத நிலையில் அவர் இன்றிலிருந்து அரச ஆட்சி முறையையே முன்னெடுத்து வருகின்றார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்றிலிருந்து அரசாட்சி முறையை முன்னெடுத்து வருகிறார். பாராளுமன்றத்தின் ஆயுற்காலம் இன்னும் முடிவுறாத நிலையில், ஜனாதிபதி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இடைக்காலத்தில் பாராளுமன்றத்தை கலைத்துள்ளதுடன், உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படாத நிலையில், நாட்டின் பாராளுமன்றம் இயங்காத நிலையில், தற்போது அரச ஆட்சிமுறையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாவைக் கொண்டு குடும்பமொன்று வாழ முடியுமா? இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இராணுவத்தினர் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வீரர்களாக சித்தரிக்கப்பட்ட வெளிநாட்டு பணியாளர்கள் இன்று தற்கொலை குண்டுதாரிகலாள சித்தரிக்கப்படுகின்றனர். இதேவேளை கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பெரும் சேவையாற்றி வருகின்ற சுகாதார பிரிவினரும் இன்று வீதியில் தள்ளப்பட்டுள்ளனர். இதுவே தற்போதைய அரசாங்கத்தின் நிலைமை.
வைரஸ் பரவல் காரணமாக தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லாத போதில், பாராளுமன்றம் இயங்காததால் அரசாங்கத்திடம் எதிர்க்கட்சி நேரடி விமர்சனங்களை மேற்கொள்ள முடியாத நிலைமையும் தோற்றம் பெற்றுள்ளது.
No comments:
Post a Comment