தேர்தல் தொடர்பாக மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு தேர்தலை சந்திப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான முன்னாள் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு இவ்வாறான ஒரு நிலையில் தேர்தலை நடத்த முடியாது எனவும் பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பாகவும் ஜக்கிய மக்கள் சக்தி உட்பட பொது அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பை இன்றையதினம் (02) 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழு இதனை தள்ளுபடி செய்வதாக தமது தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
ஜனநாயகத்தை மதிக்கின்ற அனைவரும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். ஜனநாயகத்தை மதித்தே அனைவரும் ஜனநாயக ரீதியாக இந்த பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றத்தை நாடினார்கள்.
நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில் அதனை ஏற்றுக்கொண்டு தேர்தலுக்கு தயாராக வேண்டியது அனைவருடைய பொறுப்பாகும்.
அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் நாம் ஜக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். இந்த தீர்ப்பை மதித்து தேர்தலுக்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் எனவும் இதன்போது சுகாதார அமைச்சின் பரிந்துரைகலுக்கு அமைய தேர்தலை நடாத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக நிருபர் தியாகு
No comments:
Post a Comment