(நா.தனுஜா)
இலங்கையர்களாகிய நாம் தற்போது அமெரிக்காவில் ஒடுக்கப்படுவோருக்கு எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம்.
அதேவேளை இலங்கையும் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் வாழும் ஓர் பல்லின நாடு என்பதை ஏற்றுக் கொள்ளத் தவறுவோமாயின் நாங்கள் நயவஞ்சகர்களாகவே கருதப்படுவோம் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் மினேபொலிஸ் நகரில் கடந்த மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற கைது நடவடிக்கையொன்றில் ஜோர்ஜ் பிளாய்ட் என்பவர் பொலிஸார் ஒருவரால் கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்கா முழுவதும் கறுப்பினத்தவர்களின் உரிமைகளை வலியுறுத்திப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இது குறித்து வெளியிட்டுள்ள கருத்திலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது.
இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது, அமெரிக்கா பல்வேறு இனங்களை உள்ளடக்கியதொரு நாடாகும். தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர்கள் அனைவரும் அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம்.
அதேவேளை நாம் இலங்கை என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு மற்றும் இலங்கையர்கள் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகங்களைச் சார்ந்தவர்கள் என்பதை ஏற்காவிட்டால் நாங்கள் உண்மையில் நயவஞ்சகத் தனமானவர்களாகவே அடையாளப்படுத்தப்படுவோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பில் அவர் தமது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில்,
No comments:
Post a Comment