வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளை தொடர்வதற்கு ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த வேண்டும். அதற்காக எதிர்வரும் தேர்தலில் வன்னி மக்களின் பெரும் ஆதரவுடன் மகத்தான வெற்றியை ஈட்டித்தர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொர்ந்து குறிப்பிடுகையில், வட மாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வரலாற்றில் பாராளுமன்றம் சென்ற முதல் சிறுபான்மையின உறுப்பினர் எனும் மகுடத்தை வன்னி மாவட்ட மக்களாகிய நீங்கள் கடந்த தேர்தலில் மிகுந்த நம்பிக்கையுடன் எனக்குச் சூட்டினீர்கள்.
அந்த நம்பிக்கை வீண்போகா வண்ணம் கிடைத்த பிரதி அமைச்சுப் பதவியின் அனைத்து அதிகாரங்களையும் அதனோடினைந்த அனைத்து வளங்களையும் இந்த வடபுலத்தின், குறிப்பாக வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திக்காக செலவிட்டு இயன்றளவு அபிவிருத்திகளை செய்திருக்கிறேன் என்பதற்கு வன்னி மக்களாகிய நீங்கள் சாட்சிகளாக இருக்கிறீர்கள்.
அத்துடன் நாட்டின் சிறந்த ஆளுமை மிக்க, செயற்றிரன் கொண்ட தலைவரான கோத்தயாய ராஜபக்ஷ்வை ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதியாக பெரும்பாலான மக்கள் தெரிவு செய்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார்.
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் மற்றும் உடனடி தீர்மானங்கள் தொடர்பில் மக்கள் திருப்தியடைந்திருக்கின்றனர். அதனால் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதன் மூலமே தொடரான அபிவிருத்திகளை செய்து எமது மண்ணையும்,மக்களையும் நாம் வளப்படுத்த முடியும்.
ஏமாற்றுகாரர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் மிக நிதானமாக சிந்தித்து வாக்களிப்பதன் மூலம் எமது பகுதியை சிறப்பான முறையில் அபிவிருத்தி செய்ய மீண்டுமொரு வாய்ப்பை எமக்கு தரவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment