மாலைதீவு குவைத் உட்பட வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இலங்கை தொழிலாளர்கள் நாட்டிற்கு திரும்புவதற்கான வழியில்லாததன் காரணமாக சீற்றமடைந்துள்ளதை தொடர்ந்து இந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களிற்கு அந்த நாடுகளின் பொலிஸார் பாதுகாப்பளித்து வருகின்றனர்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச உட்பட அதிகாரிகளிற்கு இது குறித்து அறிவித்துள்ளது.
.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் சில நாடுகளில் உள்ள தூதரகங்கள் கடும் அழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ளன இதன் காரணமாக அந்த நாடுகளின் பொலிஸாரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதுடன் தங்குமிடங்களையும் இழந்துள்ளதுடன் ஒருவேளை உணவிற்கே பெரும்பாடு படுகின்றனர்.
வளைகுடாவின் கடுமையான தொழில்சட்டங்கள் காரணமாக இலங்கை தொழிலாளர்கள் பலர் சட்டவிரோத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதன் காரணமாக நோய்வாய்ப்பட்டால் கூட அவர்களிற்கு சிகிச்சை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுகின்றது.
கொவிட்-19 குவைத்தில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் மத்தியில் முன்னரே பரவ ஆரம்பித்துவிட்டது, குவைத்தில் உள்ள பொதுமன்னிப்பு மற்றும் நாடு கடத்துவதற்கான முகாம்களில் ஏற்கனவே பரவ ஆரம்பித்துவிட்டது இந்நிலையிலேயே இலங்கையர்கள் மே 20ம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
குவைத்தில் 16,300 இலங்கையர்கள் நெருக்கடியான நிலையில் உள்ளனர் அவர்கள் இலங்கை திரும்ப விரும்புகின்றனர் என உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment