ஹொங்கொங் தொடர்பில் சீனாவின் உத்தேச தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையிலேயே இலங்கை சீனாவிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
சீனாவின் இறையாண்மை மற்றும் அதன் பிரதேசம் தொடர்பிலும் ஹொங்கொங்கின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரத்திலும் இலங்கை சீனாவிற்கு அதன் ஆதரவை வெளியிட்டது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ஹொங்கொங்கில் உள்ள இலங்கையர்கள் தொடர்ந்தும் தங்கள் பணிகள் வர்த்தகங்களில் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையும் சீனாவும் ஒருவருக்கொருவரின் இறையாண்மை ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகியவை குறித்து பரஸ்பரம் எப்போதும் ஆதரவை வழங்கும் மூலோபாய சகாக்கள் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எங்கள் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்வதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment