ஜீவனுக்கே அமைச்சு பதவி - இரு வாரங்களில் தலைமைப் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

ஜீவனுக்கே அமைச்சு பதவி - இரு வாரங்களில் தலைமைப் பதவி குறித்து தீர்மானிக்கப்படும்

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு அமைச்சுப் பதவி கிடைத்தால் அது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமானுக்கே வழங்கப்படும் என கட்சியின் நிதிச் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது இன்னும் இரண்டு வாரங்களில் தீர்மானிக்கப்படும். கட்சியின் தலைமைத்துவச் சபையினால் தலைமைப் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவினால் ஏற்பட்டுள்ள வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவனின் பெயரை கட்சி பரிந்துரை செய்துள்ளது.

No comments:

Post a Comment