ஏறாவூரில் பெண் கொலை - கணவன் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 3, 2020

ஏறாவூரில் பெண் கொலை - கணவன் கைது

மட்டக்களப்பு, ஏறாவூரில் பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராகேணி வீதியில், ஐய்யங்கேணி பிரதேசத்தில் நேற்று (03) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதேயிடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது கணவருடன் குறித்த பெண் வசித்து வந்துள்ளதோடு, இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டுகொண்டு சென்றதன் காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 27 வயதுடைய அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏறாவூர் நிருபர்

No comments:

Post a Comment