கரைவலை மீன்பிடி முறையில் இயந்திர சுழலியை (வின்ஞ்) பொறிமுறையை பயன்படுத்துவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள நாரா நிறுவன தலைவர் பேராசிரியர் நவரெட்ணராஜாவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று இரவு கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணம் வடமாராட்சி வடக்கு மற்றும் வடமாராட்சி கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உழவு இயந்திரம் மற்றும் இயந்திர சுழலி பயன்படுத்தப்படுவதனால் பாரம்பரிய சிறு தொழிலாளர்கள் பாதிப்பு, சுழலி இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்கள் தொடர்பில் நாரா எனப்படும் நீர் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக விஞ்ஞானபூர்வ ஆய்வுகளை மேற்கொண்டு அதனடிப்படையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இன்று காலை கரைவலை மற்றும் பாரம்பரிய கடற்றொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் உடனடி நடவடிக்கையாக நாரா நிறுவனத் தலைவரை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து அமைச்சர் கலந்துரையாடினார்.
ஆய்வுகளைத் தொடர்ந்து எடுக்கப்படும் எந்த தீர்மானமும் கடல் வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நியாயமானதாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment