அரசாங்க ஊழியர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

அரசாங்க ஊழியர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களும் அடுத்த வாரம் முதல் பணியிடங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தீர்மானம் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் திங்கட்கிழமை மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

10ஆம் திகதி முதல் டிக்கட் ஒதுக்கிக் கொண்டவர்கள் மாத்திரமன்றி அனைவரும் பயணிப்பதற்கு அனுமதி வழங்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனால் போக்குவரத்து தொடர்பில் சிக்கல் ஏற்படாதென செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக அரச மற்றும் தனியார் துறை முற்றாக முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment