மத்திய வங்கியின் கீழுள்ள நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான முழுப் பொறுப்பையும் மத்திய வங்கி ஏற்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
த பினான்ஸ் பீ.எல்.சீ நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பாக ஆராயும் கூட்டம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
மத்திய வங்கியின் நிதி நிறுவனங்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைவதன் காரணமாக அரசாங்கத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. புதிதாக சட்டம் வகுத்தாவது இவ்வாறான நிதி நிறுவனங்கள் தொடர்பில் செயற்பட வேண்டுமென்றும் பிரதமர் கூறினார்.
த பினான்ஸ் கம்பனியின் பீஎல்சீ நிறுவனத்தில் வைப்பு செய்தவர்களுக்கு நிதி வழங்குவதை துரிதப்படுத்துமாறு பிரதமர் இதன்போது அறிவித்தார்.
திங்கட்கிழமை முதல் 97 வீதம் வரை நிதி வழங்கப்படுமென்றும் எஞ்சிய 03 வீதம் பின்னர் செலுத்தப்படுமெனவும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எச்.ஏ.கருணாரத்ன இங்கு கூறினார்.
மத்திய வங்கியின் கீழுள்ள நிதி நிறுவனமொன்றில் நடந்துள்ள மோசடி தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென அமைச்சர் ரமேஷ் பத்திரண இதன் போது கோரினார்.
நிதி நிறுவனங்களில் வைப்பு செய்தவர்களை பாதுகாக்கவும் நியாயத்தை நிலைநாட்டவும் வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.
மத்திய வங்கியின் கீழுள்ள சுயாதீனமான பணிப்பாளர் சபையின் கீழ் பீஎல்சீ நிறுவனம் நிர்வகிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனத்தை முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்க முடியுமெனவும் பிரதி மத்திய வங்கி ஆளுநர் கருணாரத்ன இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment