(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவினை அடைந்துள்ளார்கள். பொதுத் தேர்தலை இவர்கள் எதிர்கொள்வதை தவிர வேறெந்த மாற்று வழிகளும் தற்போது கிடையாது. யாருக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும், பொதுத் தேர்தலை நடத்த எதிர்த்தரப்பினர் முன்னெடுத்த சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. பொதுத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல. ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
அரசியல் ரீதியில் ஐக்கிய தேசிய கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் பாரிய பின்னடைவை அடைந்துள்ளார்கள். எதிர்த்தரப்பினர் பொதுத் தேர்தலை எதிர் கொள்வதை தவிர வேறெந்த மார்க்கமும் இனி கிடையாது. எத்தரப்பினருக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை மக்களே ஜனநாயக ரீதியில் தீர்மானிப்பார்கள்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்கள் கடினமான முறையில் முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment