ஜனாதிபதி செயலணி தனியான சிங்கள இராணுவ ஆட்சி நடைபெறுவதை எடுத்துக் காட்டுகின்றது - News View

About Us

About Us

Breaking

Friday, June 5, 2020

ஜனாதிபதி செயலணி தனியான சிங்கள இராணுவ ஆட்சி நடைபெறுவதை எடுத்துக் காட்டுகின்றது

அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிகளில், அதிகமாக படை அதிகாரிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது நாட்டில் தற்போது இராணுவ ஆட்சி இடம்பெறுவதை எடுத்துக் காட்டுவதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பான சட்டத்தினை மதிக்கும் சமூகம் ஒன்றைகட்டி எழுப்புதல் மற்றும், கிழக்கிலுள்ள தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக, விசேட செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணம் என்பது தமிழர்களின் பூரவீக தாயகப் பூமியாகும். இந்தச் செயலணியில் தனிச் சிங்கள உறுப்பினர்கள், குறிப்பாக படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு நியமிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு நியமிக்கப்பட்டிருப்பது தமிழர்களுடைய தொல்லியல் சார்ந்த அடையாளங்களின் இருப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமென நான் எண்ணுகின்றேன். தனியான சிங்கள இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது. என்பதனை இது எடுத்துக்காட்டுகின்றது என்றார்.

No comments:

Post a Comment