(இராஜதுரை ஹஷான்)
தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நிச்சயம் கிடைக்கும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுஜன பெரமுனவிற்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் பெறவில்லை என்று குறிப்பிட முடியாது. கணிசமான அளவு ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இருந்து அந்த அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் மத்தியில் தவறான குற்றச்சாட்டுக்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மிக துரிதமாக அபிவிருத்தியை முன்னெடுத்தார். தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் தேவைகளுக்காக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தின் பயனை எவரும் பெற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் கடந்த அரசாங்கத்தில் பாரிய நெருக்கடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். தேசிய பாதுகாப்பு அரசியல் மயப்படுத்தப்பட்டமையினால் பாரிய விளைவுகள் நாட்டில் ஏற்பட்டன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேசிய பாதுகாப்புக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்குவார். பொதுத் தேர்தலிலும் தேசிய பாதுகாப்பு, துரித அபிவிருத்தி ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும். தமிழ் முஸ்லிம் மக்கள் இம்முறை நிச்சயம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் பலமான அரசாங்கத்தில் பங்குதாரர்களாகுவார்ரகள் என்றார்.
No comments:
Post a Comment