உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தற்கொலை குண்டுதாரி இல்ஹாம் அழுதவாறே வீட்டிலிருந்து சென்றார் - மைத்துனர் ஆணைக்குழுவில் சாட்சியம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தற்கொலை குண்டுதாரி இல்ஹாம் அழுதவாறே வீட்டிலிருந்து சென்றார் - மைத்துனர் ஆணைக்குழுவில் சாட்சியம்

சங்கரில்லா ஹோட்டல் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய இல்ஹாம் அஹ்மட், தாக்குதலுக்கு 07 மணி நேரத்துக்கு முன்னர் தெமட்டகொடை, மஹவில பகுதியிலுள்ள வீட்டுக்கு வந்தார். தமது இரு பிள்ளைகளையும் கட்டிப்பிடித்து அழுத பின்னர் வீட்டிலிருந்து வெளியேறியதாக தற்கொலை குண்டுதாரியின் மைத்துனர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு தமது பெயரை வெளியிட வேண்டாம் எனவும் அவர் கோரினார். 

தொடர்ந்து சாட்சியமளித்த அவர், எனது ஏழாவது சகோதரியான பாத்திமா ஜிப்ரி தான் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் தெமட்டகொடையில் இறந்தார். அவர் சர்வதேச பாடசாலையில் கற்றார். அவர் அப்பாவித் தனமானவர். அதிக சமூக சேவைகள் புரிந்தார். 

2012 நவம்பரில் தான் அவர் திருமணம் செய்தார். வீட்டில் குர்ஆனை மனனம் செய்வதில் ஆர்வம் காட்டினார். திருமணத்தின் பின்னர் அவருடன் பழகுவது குறைந்தது. இரு வாரத்திற்கு ஒரு தடவை அவர் எமது வீட்டுக்கு வருவார்.

2016 ஜூன் மாதம் எனது திருமணம் நடந்தது. அதற்கு தங்கையோ மைத்துனரோ வரவில்லை. இஸ்லாமிய முறைப்படி இவ்வாறு திருமண வைபவம் நடத்துவது தவறென்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் அடிப்படைவாத போக்கில் சிந்திப்பதை உணர்ந்தேன். நாம் மதம் தொடர்பாக பேசுகையில் அவர்கள் மாற்றமான கருத்தை கூறுவர். வாக்களிப்பதற்கும் மைத்துனர் எதிராகவே இருந்தார்.

எனது தந்தை பௌத்த மக்களுக்கும் விஹாரைகளுக்கும் உதவுவதையும் அவர் எதிர்த்தார். அவர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்தே கற்பித்தார்கள். பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றுவதில்லை.

எனது தங்கையை இறுதியாக மார்ச் மாதம் தான் சந்தித்தேன். அப்போதும் அவரில் பெரிய மாற்றம் எதனையும் காணவில்லை.

2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு எனது தாயாருடன் அவர் தொலைபேசியில் பேசியுள்ளார். விரைவாக வீட்டுக்கு வருமாறு அழுதவாறு அழைத்துள்ளார். அவர் 10.30 மணியளவில் அங்கு சென்றுள்ளார். ஏன் கவலையாக இருக்கிறீர்கள் என்று தயார் வினவியபோது, முதல்நாள் அதிகாலை 1.00 மணிக்கு கணவர் வந்து பிள்ளைகளை முத்தமிட்டுவிட்டுச் சென்றதாக தங்கை கூறியுள்ளார். தொழுகைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த பின்னர் தான் அவர் தேசிய தௌஹீத் ஜமாஅத்தில் அங்கத்தவராக இருப்பதை அறிந்தோம்.

தனது கணவரின் செயற்பாடுகளை அவர் எதிர்க்கவில்லை. திருமணத்தின் பின்னர் அவருக்கு மூளைச்சளவை செய்யப்பட்டுள்ளதை அறிந்தோம். அவருக்கு ஆலோசனை வழங்க நாம் முற்படவில்லை. முன்கூட்டி தெரிந்திருந்தால் அவரை மீட்டிருப்போம் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment