குளவி கொட்டுக்கு இலக்காகி 10 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

குளவி கொட்டுக்கு இலக்காகி 10 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொட்டகலை பொரஸ்கிறிக் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக் இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 10 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 10 பேரும் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment