வருமான வரி செலுத்தாதோருக்கு அபராதம் இல்லை - சலுகைக் காலம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

வருமான வரி செலுத்தாதோருக்கு அபராதம் இல்லை - சலுகைக் காலம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலகட்டத்தில், வருமான வரி செலுத்தத் தவறியவர்களுக்கு எவ்வித அபராதமும் விதிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (04) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய ஜூன் 20 வரையான காலப் பகுதி வரை, வருமான வரி தொடர்பில் அபராதம் விதிக்கப்படாது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment