தர்க்க ரீதியாக நோக்கும் போது கொரோனா வைரஸ் திட்டமிடப்பட்ட சதியா? அல்லது இறைவனின் நாட்டமா? - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

தர்க்க ரீதியாக நோக்கும் போது கொரோனா வைரஸ் திட்டமிடப்பட்ட சதியா? அல்லது இறைவனின் நாட்டமா?

ஏ.எம்.எம். பர்ஹான்

விஞ்ஞான ஆய்வின் பிரகாரம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரே ஒரு கோளாகிய இவ் உலகம் (புவி) உருவாக்கம் பெற்று ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளாகின்றது. இக்கோளம் உருவாகியதிலிருந்து இன்று வரை பல மாற்றங்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ள இக்கோளமே பல அறிவியல் சார்ந்த வளர்ச்சிகளையும் கண்டுள்ளமை யாவரும் தெரிந்ததே. பல்வேறு அறிவியல் சார் துறைகளில் வளர்ச்சி கண்டுள்ள நாம் அதனால் பல நன்மைகள் அடைந்தாலும் சில நேரங்களில் தவறான அடைவுகளையும் சந்தித்துள்ளோம் (அணுகுண்டு தாக்குதல், ஏவுகணை தாக்குதல், சைபர் தாக்குதல் & etc..) என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். 

இன்றைய காலகட்டத்தில் உலகமெங்கும் பேசு பொருளாக மாறியுள்ள ஒரு வார்த்தை "கொரோனா" என்பது யாவரும் அறிந்த ஒன்றே. சீனாவில் ஹுபேய் மகாணத்தின் தலை நகரமான வூகான் நகரில் ஆரம்பமானதாக கூறப்படும் இவ்வைரஸ்(COVID19) உருவாகி ஏறத்தாழ ஆறு மாதங்கள்(அரையாண்டு) முடிவடைந்த நிலையில் சுமார் இதுவரை 6 மில்லயனுக்கு அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் மேலும் 3.6 இலட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 2.7 மில்லியனுக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்த நோயினை முற்றாக நூறு வீதம் முறியடிக்கும் வகையில் எந்த ஒரு தடுப்பு மருந்தும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது விஞ்ஞன ரீதியாக நோக்கும் போது தலைகுனிய வேண்டிய விடயமாகும். மருத்துவ ரீதியாக பல ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேட்கொண்டு அதில் பல வெற்றியும் கண்டுள்ள தலைமுறையில் வாழும் நாம் நோய்தொற்றை ஏற்படுத்தும் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர் துணிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஆறு மாதங்களாக அதற்கெதிரான போராட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதுவரை உலகில் தோன்றிய பல நோய்கள்(மலேரியா, எபோலா வைரஸ், பிளக், பன்றிக்காய்ச்சல் & etc...)குறிப்பிட்ட சில நாடுகள் அல்லது கண்டம் என்ற வரையரையுடன் தோற்றம் பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆனால் கொரோனா மட்டுமே தனது கோரதாண்டவத்தினை உலகமெங்கும் தடம் பதித்துள்ளது. பல நாடுகளில் இந்நோய்த்தாக்கம் தீவிரமாக இருந்தாலும் கணிப்புகள் ரீதியாக வல்லரசு நாடுகளிலேயே (அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின்,இந்தியா)அதிகம் தொற்று பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது அந்நாட்டு அரசாங்கங்களிற்கு பெரும் சவாலாக இந்நோய் (COVID19) அமைந்துள்ளதுடன் வரலாற்றில் என்றும் சந்தித்திராத பெரும் பொருளாதார ரீதியான சரிவுக்குள் சிக்குண்டுள்ளது. 

எது எவ்வாறாயினும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க பல நாடுகள் இந்நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தினை கண்டு பிடிக்க பல பில்லியனளவில் செலவு செய்து வருகின்றது. அந்த வகையில் பல நாடுகள் தடுப்பு மருந்தின் ஆரம்பகட்ட பரிசோதனையில் தோல்வியடைந்திருந்தாலும் தொடர் முயற்சியின் விளைவாக விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளே தற்போது வரை மனித பரிசோதனை வரை முன்னேற்றம் கண்டுள்ளனர். சீனா, அமெரிக்கா, இஷ்ரேல் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை அந்த வரிசையில் குறிப்பிடலாம்.தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் காலதாமதமாகுவதற்கான காரணம் பற்றி துறைசார் நிபுணர்கள் கூறுகையில் "குறித்த வைரஸ் (COVID19) ஏனைய வைரசுகளிடமிருந்து சில வித்தியாசங்களை கொண்டிருக்கிறது. கூர்ப்பு ரீதியாக தனது வடிவத்தில் மாற்றம் மேற்கொள்வதோடு வழங்கப்படும் தடுப்பு மருந்திற்கு எதிராகவும் இயல்புகளை மாற்றி கொள்கின்றது" என்றவாறு குறிப்பிடுகின்றனர். 

போட்டி போட்டுக்கொண்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் பல நிறுவனங்கள் மற்றும் சர்வதேச மருத்துவ பல்கலைக்கழகங்கள் இவ்வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்தினை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் திரைமறைவில் வர்த்தக நோக்கமும் காணப்படுகின்றது. மேலும் தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் நிறுவன அனுசரணையாளரே அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கு உலக செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பார் என்பது அறிவியல் நிபுணத்துவர்களின் கருத்தாக இருக்கின்றது. இதற்காக முன்னணி செல்வந்தர்கள் இம்முயற்சிற்கு முதலீடு செய்து வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் பல நாடுகள் சீனாவின் மீது "இவ்வைரசினை சீனாவே திட்டமிட்டு பரப்பியுள்ளது" என்று பழி சுமத்தி வருகின்றதுடன் அக்குற்றச்சாட்டை சீனா இன்றுவரை மறுத்து வருவதனை நாம் அறிந்திருப்போம். மேலும் இவ்வைரசானது சீனாவின் "Wuhan Institute of Virology" எனும் ஆய்வுகூடத்தில் செயற்கையாக உருவாக்கிய நிலையில் அங்கிருந்தே கசிந்திருக்கலாம் என சில விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்திருந்தது. மேலும் இது தொடர்பில் குறித்த ஆய்வுகூடம் மீது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் சீனா இதற்கு தனது கண்டனத்தை தெரிவித்ததுடன் இது தொடர்பான எந்த ஒரு ஆய்வுக்கும் சீன அரசு அனுமதி வழங்காது எனவும் கூறியிருந்தது. குறிப்பாக அமெரிக்கா சீனாவின் மீது தொடர் பழிசுமத்தி வருவதுடன் இதனை (COVID19) அமெரிக்க அதிபர் "சீன வைரஸ்" எனவும் செய்தியாளர் மாநாட்டில் கூறி வருகின்றார். மேலும் சீனாவின் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் போர் தோடுப்போம் என்றும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர். கடந்த ஒரு மாதமாக உலகளவில் இந்நோய் சற்று வலுவிழந்திருந்தாலும் அமெரிக்காவில் தொடர்ந்தேர்ச்சியாக அதிகளவான புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். தொற்றுக்குள்ளானவர்கள் மட்டுமல்லாது மரண எண்ணிக்கை அடிப்படையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளமை சோகமான ஒரு சாதனை என டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

அறிவியலை தவிர்த்து இறை நம்பிக்கை ரீதியாக நோக்கும் பொழுது மார்க்க அறிஞர்கள் கூறுகையில் "எம் அனைவருக்கும் இச்சந்தர்ப்பம் கடவுள் உண்டு என்பதற்கான அத்தாட்சியாக அமைகின்றது".இறைவன் எப்போதும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவன். மேலும் இவ்வுலகில் எமக்கு வழங்கப்பட்ட வளங்களுக்கான ஓய்வாகவும், இயற்கையினை துய்மைப்படுத்துவதற்காக இறைவன் இவ்வாறான நிலையினை உருவாக்கியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும் வருடக்கணக்கில் கடலிலேயே தனது பயணத்தை கொண்டிருக்கும் அமெரிக்க போர்க்கப்பலில் ஏற்பட்ட கோரோனா தொற்றினை அடிப்படையாக கொண்டு இது இறைவனின் நாட்டமே என மார்க்க அறிஞர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

No comments:

Post a Comment