பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Friday, June 5, 2020

பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் - தயாசிறி ஜயசேகர

(எம்.மனோசித்ரா)

அளுத்கம - தர்ஹா நகர் பகுதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் கொரோனா வைரஸ் ஒழிப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள அனைத்து பாதுகாப்பு துறையினரின் சேவையையும் கேள்குட்டுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அளுத்கம - தர்ஹா நகர் பகுதியில் ஊரடங்கின் போது வீதியில் பயணித்தமைக்காக 14 வயது சிறுவனொருவன் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தாரிக் என்ற குறித்த சிறுவன் மீது மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயல் துரதிஷ்டவசமானது என்பதோடு ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் கொரோனா ஒழிப்பிற்காகவும் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காகவும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெறும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் ஏனைய பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்பையும் கேள்விட்குட்படுத்தியுள்ளது.

எனவே இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு நாம் எமது முழுமையான ஆதரவினை வழங்குவோம். அத்தோடு பாதிக்கப்பட்ட குறித்த சிறுவனுக்கு நீதி வழங்கப்படும் என்று நம்புகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment