காத்தான்குடியில் வீட்டுக் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (03) மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி 03ஆம் குறிச்சி கல்மீசான் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்தே இப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டில் வசித்து வந்த மன நோயால் பாதிக்கப்பட்ட 52 வயதுடைய பெண்ணின் சடலமே இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் கிணற்றில் கிடப்பதாக காத்தான்குடி பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசாரும் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர், நகர சபை உறுப்பினர் எம்.ஐ.ஜவாஹிர் உட்பட புதிய காத்தான்குடி ஜனாசா நலன்புரிச் சங்கத் தொண்டர்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த பெண் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மன நோயாளியாக இருந்து வருவதுடன் அதற்கான சிகிச்சையையும் பெற்று வந்துள்ளார் என பொலிசாரின் விசாரணையிலிருந்து தெரிய வருகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
எம்.எஸ்.எம். நூர்தீன் நூர்தீன்
No comments:
Post a Comment