எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் இரத்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கிணங்க இரத்தம் சேகரிக்கும் இரத்ததான முகாமொன்று நேற்று புதன்கிழமை (03.06.2020) மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலின் வழிகாட்டலில் இயங்கி வரும் ஸலாமா பௌன்டேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா ஆரம்பித்து வைத்தார்.
இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியகாலை பணிப்பாளர் டாக்டர் திருமதி. கலாரஞ்சினி கனேசலிங்கம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.வாசுதேவன், போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி டாக்டர். ஹர்விசாந்த், ஜாமியுஸ்ஸலாம் பள்ளிவாயல் சபைத் தலைவர் கலாநிதி எம்.எச்.எம். சியாம், மட்டக்களப்பு சலாமா பௌண்டேசன் நிறுவனத்தின் தலைவர் எம்.ஹரீஸ் மற்றும் வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள் ஸலாமா பௌன்டேசன் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஸலாமா நிறுவணத்தின் செயற்பாடுகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா பாராட்டினார். மூன்றாவது வருடமாக இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது. 150 பேர் இதன் போது இரத்ததானம் செய்தனர்
இதன் ஆரம்ப நிகழ்வை பள்ளிவாயல் செயலாளர் அமீன் நழீமி தொகுத்து வழங்கினார். மிகவும் சிறப்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment