கிழக்கின் முன்னாள் முதலமைச்சருடன் கைகோர்த்து செயல்பணியில் குதிக்க சந்தர்ப்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 4, 2020

கிழக்கின் முன்னாள் முதலமைச்சருடன் கைகோர்த்து செயல்பணியில் குதிக்க சந்தர்ப்பம்

எம்.எச்.எம். இம்றான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தத்தமது அமைப்புகள் மூலம் இதுகாலவரையில் செயல்பணிகளை நல்கிவரும் சமூகநல அமைப்புகள் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருடன் கைகோர்த்து தொடர்ந்து தமது பணிகளை மேலும் சிறந்த முறையில் முன்னெடுக்க அரிய சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், கிராமிய அபிவிருத்தி பெண்கள் சங்கங்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், மீன்பிடித் தொழிலாளர் சங்கங்கள், கைத்தொழில் அபிவிருத்தி சங்கங்கள், ஒட்டோ சங்கங்கள், சமூக நற்பணி மன்றங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அனைத்து அமைப்புகளும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

தொடர்புகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் - 076 082 4145

No comments:

Post a Comment