"எமக்கான தீர்வுகளை ஆட்சியாளர்கள் தங்கத்தட்டில் வைத்து தரப்போவதில்லை. அதிலும் குறிப்பாக மலையக மக்களுக்கு பல தசாப்தங்கள் கடந்தும் முழுமையான தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படவில்லை.
தீர்வுகளைப் பெறுவதற்கு ஜனநாயக வழிமுறைகளே சிறந்த தேர்வாகும். அதில் 'வாக்குரிமை' என்பதே பலம்பொருந்திய ஜனநாயக ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை மிநுட்பத்துடன் பயன்படுத்தினால் நிச்சயம் ஓர் நாள் மாற்றம் வரும்."
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.
நுவரெலியாவில் நேற்று (24.06.2020) நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
"மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே நான் எனது தந்தையின் வழியில் அரசியலுக்கு வந்துள்ளேன். சிறப்பாக செயற்படக்கூடிய ஆற்றல் என்னிடம் இருக்கின்றது. எனவே, என்னை போன்ற இளைஞர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பினால் நாங்கள் உங்களுக்காக நிச்சயம் குரல் எழுப்புவோம்.
உங்களோடு இணைந்து தீர்வுகளை பெறுவதற்கு பாடுபடுவோம். நுவரெலியா மாவட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் சில தீர்க்கப்பட்டிருந்தாலும் ஏனையவை கிடப்பில் கிடக்கின்றன." எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment