யாழ் மாவட்டத்தில் விலங்கு வேளாண்மையை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கிலும் புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர்கள் முதலீட்டில் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் “கோகுலம் விலங்கு வேளாண்மை பண்ணை” நேற்றையதினம் (24) முன்னாள் விவசாயத்துறை பிரதியமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இப்பண்ணையில் மாடுகள்,ஆடுகள்,கோழிகள் என்பன வளர்க்கப்படுவதோடு நன்னீர் மீன் வளர்ப்பும் இறால் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுவுள்ளது. இதன் மூலம் உள்ளூர் பண்ணைகள் ஊக்குவிக்கப்படும் மற்றும் இந்த பண்ணையை உதாரணமாக வைத்து யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் விலங்கு வேளாண்மை துறை வளர்ச்சி பெற வேண்டும் அங்கஜன் இராமநாதன் கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment