போலியான தகவல்களை வெளியிட்டு சர்வதேசத்தில் இலங்கை மீதான நம்பிக்கையை சீர்க்குலைத்து விட வேண்டாம் - ஐக்கிய தேசிய கட்சி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

போலியான தகவல்களை வெளியிட்டு சர்வதேசத்தில் இலங்கை மீதான நம்பிக்கையை சீர்க்குலைத்து விட வேண்டாம் - ஐக்கிய தேசிய கட்சி

(லியோ நிரோஷ தர்ஷன்)

சர்வதேச நாடுகளுடனான தொடர்புகளையும் கொள்கைகளையும் அரசாங்கம் சுய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துகின்றது. மிலேனியம் சவால் ஒப்பந்தம் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரு தடவைகளில் கைச்சாத்திடப்பட்டதாகவும் குறிப்பிட்ட தொகை நிதி பெறப்பட்டுள்ளதாகவும் மீளாய்வு குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. இது உண்மைக்கு புறம்பான தகவல் என்பதை அமெரிக்கா அறிவித்துள்ளது.

எனவே தேர்தலை மையப்படுத்தி இவ்வாறான போலியான தகவல்களை வெளியிட்டு சர்வதேசத்தில் இலங்கை மீதான நம்பிக்கையை சீர்க்குலைத்து விட வேண்டாம் என்றும் உலக நாடுகளுடன் வீண் பகையை வளர்த்துக் கொள்ளாது செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து மீளாய்வு குழுவின் அறிவிப்புகள் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார நடவடிக்கைகள் குறித்து இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டது.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியிலிருந்து தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மிலலேனியம் சவால் ஒப்பந்தம் கைச்சசாத்திடப்பட்டதாகவும், 7.4 மில்லியின் மற்றும் 2.6 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் மீளாய்வு குழு குற்றம் சுமத்தியுள்ளது.

இதனை முற்றாக நிராகரித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி சுய அரசியல் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்பட்டு வீண் பகையினை அரசாங்கம் தேடிக்கொள்ள கூடாது. அமெரிக்காவுடனான உறவு மிக நீண்டகாலமாக ஆரோக்கியமாக பேணப்பட்டு வருகிறது.

வெறும் உள்நாட்டு அரசியலுக்காக அந்த உறவை சீரழித்து விட கூடாது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் மில்லேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து போலியான தகவல்கள் பரப்பப்பட்டது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. தற்போது அதேபோன்று போலியான தகவல்கள் வழங்கப்படுகின்றன.

கடனற்ற 480 மில்லியன் அமெரிக்க டொலர் மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு கிடைக்கப்பெறும். ஆனால் ஒப்பந்தம் குறித்து இறுதி தீர்மானம் அரச தரப்பினால் எடுக்கப்படாத நிலையிலேயே இவ்வாறான போலி செய்திகள் பரப்பப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment