முஸ்லிம் எதிர்ப்பு, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை தேர்தல் வெற்றிக்காக மீளப் புதுப்பிக்கும் பொதுஜன பெரமுன - மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

முஸ்லிம் எதிர்ப்பு, மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை தேர்தல் வெற்றிக்காக மீளப் புதுப்பிக்கும் பொதுஜன பெரமுன - மங்கள சமரவீர

(நா.தனுஜா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தல் பிரசாரத்தை மேம்படுத்தி கொடி நாட்டுவதற்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பயன்படுத்தி அதனூடாக வெற்றியைப் பெற்றுக்கொண்ட சூத்திரத்தை மீளப்புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.

அதன் ஓரங்கமாகவே மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதுடன், ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மையமாகக்கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறியையும் பரப்பி வருகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருக்கிறார்.

மிலேனியம் சவால் ஒப்பந்தம் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரு தவணைகளாக கைச்சாத்திடப்பட்டதாகவும், அக்காலப்பகுதிக்கென குறிப்பிட்ட தொகை நிதி பெறப்பட்டுள்ளதாகவும் மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட மீளாய்வுக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்திருக்கிறது.

இத்தகவலை அடிப்படையாகக் கொண்டு தற்போது ஆளுந்தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன், அந்நிதி செலவிடப்பட்ட விதம் பற்றிய தகவல்களையும் கோரிவருகின்றனர். எனினும் மீளாய்வுக்குழுவினால் கூறப்படுவது போன்று மிலேனியம் சவால் ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்கத்தினால் நிதி பெறப்படவோ அல்லது செலவிடப்படவோ இல்லை என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகம் விளக்கமளித்திருக்கிறது.

இந்நிலையிலேயே இவையனைத்தும் ஆளுந்தரப்பினரின் பொதுத் தேர்தல் பிரசார உத்தி என்று சாடியிருக்கும் மங்கள சமரவீர, இதுகுறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தல் பிரசாரத்தை மேம்படுத்தி கொடி நாட்டுவதற்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பயன்படுத்தி அதனூடாக வெற்றியை பெற்றுக்கொண்ட சூத்திரத்தை மீளப்புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. 

இந்தப் பிரசாரமானது மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதுடன், ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மையமாகக் கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறியுடன் இணைந்ததாகவே அமைந்திருக்கிறது. அத்தோடு பொய்கள், அதிக பொய்கள் மற்றும் மிகவும் மோசமான பொய்களும் சேர்ந்திருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment