தாமரை பூவை பிடுங்கச் சென்றவர் சடலமாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 6, 2020

தாமரை பூவை பிடுங்கச் சென்றவர் சடலமாக மீட்பு

ஹொரவபொத்தானை, மரதங்கடவல குளத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், அவரது சடலம் இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவபொத்தானை, 100 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எம்.டி. அரூஸ் (30) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (05) பிற்பகல், வீட்டிலிருந்து சக நண்பர்களுடன் குளத்திற்கு நீராடச் சென்றபோது, தாமரை பூவை ஆய்வதற்காக நீந்திச் சென்றபோது, இவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

காணாமல் போன இளைஞரின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸார், கடற்படையினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment