யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட தொழில்நுட்ப சாதனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மொறட்டுவை பல்கலைக்கழக தொழில்நுட்பவியலாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள மேற்படி தொழில்நுட்ப சாதனம் நேற்று அமைச்சர் எம்.எஸ். சந்திரசேனவின் முன்னிலையில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது.
விசேட ஒலி தொழில்நுட்ப வகையான இந்த தொழில்நுட்ப சாதனமானது யானைகள் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடிக்க உதவுவதாக வன ஜீவராசிகள் தொடர்பானஅமைச்சர் எம்.எஸ். சந்திரசேன தெரிவித்தார்
யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைளை மேறகொண்டு வரும் நிலையில் மோதலை நிவர்த்திப்பதற்கு வருடமொன்றுக்கு 100 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யானை - மனித மோதலால் கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் 260க்கும் அதிகமான யானைகளும் 150 மனிதர்களும் உயிரிழந்துள்ளதாக சூழலியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களே இந்த நெருக்கடி நிலைக்கு காரணமாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காட்டு யானை பிரச்சினை இந்தளவு உக்கிரமடைந்துள்ளமைக்கு காரணம் என்ன? யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதா அல்லது யானைகளின் வாழ்விடம் மனித வாழ்விடமாக மாற்றப்படுவதா? என அவர்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சூழலியலாளர்கள், கடந்த 20 வருடங்களுக்குள் மனித நடவடிக்கைகளால் நாட்டில் அதிகளவு வனப்பகுதி அழிவடைந்துள்ளது. முறையற்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பயிர்ச்செய்கை நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டமை இதில் ஆதிக்கம் செலுத்துகின்றது என்றனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment