ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் 18 விஷேட விசாரணைகளுக்கான சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2015 ஜனவரி எட்டாம் திகதி முதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
அதற்கிணங்க மேற்படி ஆணைக்குழுவில் இதுவரை 2000 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 97 முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசேட பொலிஸ் பிரிவின் மூலம் அந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் ஆறு மாத காலங்கள் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்டிருந்தன.
எனினும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றுள்ள 2000 அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் உள்ள நிலையில் மேற்படி காலத்தை மேலும்சில மாதங்கள் நீடிப்பதற்கு நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment